பரியனுக்கு பிறந்தநாள்
அந்த இரவை நெஞ்சில் வைத்துப் போற்றுகிறேன்.!
சென்னையில் யாரும் எங்கும் செல்லலாம். யாரும் யாருக்காகவும் பயப்பட வேண்டியதில்லை.
கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்று ஏனோ தோன்றுகிறது.
- ராம்
இது மாரி செல்வராஜ் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் சிறுகதை தொகுப்பிற்கு ராம் எழுதிய குறிப்பு. மாரியைப் பற்றி பேச ராமிடம் இருந்து ஆரம்பிப்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மாரி செல்வராஜுக்கும் ராமுக்கும் இடையில் அவர்கள் மனம் விட்டுப் பேசிக்கொண்ட அந்த ஒரு இரவு மட்டும் இல்லையென்றால்
நாடே கொண்டாடும் பரியன் கிடைத்திருக்க மாட்டான்.
ராமுக்கு என் முத்தங்கள்.
வரலாறு மன்னர் பெருமைகளை
மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறது.
அது மறந்தும் மக்களைப் பேசுவது இல்லை. மக்களைப் பேச மக்களின் கதைகளைப் பேச மக்களிடமிருந்தே ஒருவன் வர வேண்டும்.
அப்படி வந்தவர் தான் மாரி செல்வராஜ்.
தென்தமிழகத்தின் வற்றாத
புண்ணிய நதியான தாமிரபரணி ஆற்றின் அடி ஆழத்தின் வன்முறைச் சுழலில் சிக்கி இன்னும் மீளவே முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதர்களின் சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட கதைகளை அவரது முதல் புத்தகத்திலேயே தோண்டி தூக்கி அந்த ஆற்றின் கரையிலேயே பரப்பி வைத்தார் மாரி செல்வராஜ் - "தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்"
அந்த தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் நம்மை ஒருவரின் வாழ்க்கைக்குள் கூட்டிச் சென்று இதயத்தில் ஒரு கீறலை இட்டு வெளியேற்றும். அவை வெறும் புனைவு அல்ல. அசலுக்கு அசலான மனிதர்கள்.
அந்தத் தொகுப்பில் வரும் முக்கனி, நொச்சி, முண்டன், செண்பகவள்ளி, காமராசு, அப்பாதுரை மாமா என அத்தனை அத்தனை மாந்தர்களும் நமது நிலத்தின் எளிய மனிதர்கள் தான்.
தோல்கருகி கிடக்கும் தாய் பன்றியின் மடியின் காம்புகளில் பாலைத் தேடும் பன்றிக்குட்டிகள், தட்டான்பூச்சி, தடதடக்கும் தண்டவாளங்களின் அருகே மேயும் சினைப்பசுக்கள், சுரேஷ் என்று பெயரிடப்பட்ட நாய் என ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கூட மாரியின் இரக்கமென்பது அலாதியானது.!
2013 - மறக்கவே நினைக்கிறேன் தொடர்கதை.
அந்தக் கதைகளை மறக்கவே நினைக்கிறேன் ஆனாலும் அந்த கதைகளை ஒருபோதும் வாசகர்களால் மறக்கவே முடியாது.
படித்து முடித்தவுடன் ஒரு பெருமூச்சு, படித்துக் கொண்டிருக்கும் போதே சிலதுளி கண்ணீர். என் பால்யத்தை மீட்டெடுக்க என்னை என் நினைவுப் பாதைக்குள் பசித்த நரி போல் ஓடவிட்டது அந்த தொடர் கதை.
எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை கதைகள். இது தாமிரபரணியில் நடந்த கதைகள்
என்று மட்டுமே சுருக்கி விட முடியாது. அசலுக்கு அசலான தென்மாவட்டத்து கதைகள். தென்மாவட்ட மைந்தர்கள்.
ரசூலின் கதை
என் இனிய கார்த்திகாவின் கதை
சுடலை மாடசாமி கோவில் பூசாரி திரு.கு.சின்னகுப்பையின் கதை
சொட்டு அக்காவின் கதை
தாமிரபரணியாற்றில் அடித்துக் கொல்லப்பட்ட குமார் அண்ணனின் கதை
நான் எப்போது மண்டியிட்டு ஜெபித்தாலும் அது உனக்காகத் தான் இருக்கும் மாரி என்று சொன்ன ஜோவின் கதை என்று ஒவ்வொன்றும் உலுக்கியது.
இந்தக் கதைகளில் எங்கள் கண்ணீர் படும் போது அந்த எளிய மனிதர்களின் நெஞ்சம் குளிர்ந்திருக்கும் தானே!
இன்னும் சிரிக்க
இன்னும் அழ
இன்னும் நினைக்க
இன்னும் மறக்க
இன்னும் மனிதர்களை நேசிக்க
இன்னும் நீங்கள் எழுத வேண்டும் மாரிண்ணா.
2018 தமிழ் சினிமாவின் மீது புளியங்குளத்து எளிய மனிதனின் சம்மட்டி அடி!
EDUCATE ORGANAISE REVOLT என்று அம்பேத்கரின் பொன்மொழியை தாங்கி வந்த டிரைலர் மிரட்டியது.
கருப்பி பாடல் வெளியாகி உறைய வைத்தது. ரயில் விட போலாமா பாடல் வெளியாகி குளிர வைத்தது. அதைத் தொடர்ந்து நான் யார் பாடல் வெளியாகி அதிர வைத்தது. படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இத்தனை இத்தனை அதிர்வுகள்.
ஆனால், படம் நினைத்ததை விடவும் ஒருபடி மேலாக ஜெயித்தது. அதிகார சீண்டல்கள், ஆணவக் கொலைகள், அடிமைத்தனம், அடக்குமுறை என வலியும், புழுதியும், வெக்கையும், வேட்டையும் நிறைந்த வாழ்க்கையை அத்தனை அழகாயும் ஆழமாயும் படம் பிடித்துக் காட்டினீர்கள் மாரிண்ணா.
சாதிய வன்முறை வெறியாட்டங்களை எளிய காட்சிகள் மற்றும் வசனங்களின் மூலம் தீவிரமாக கடத்தினீர்கள். படத்தின் வெற்றியை நான் எப்போது உணர்ந்தேன் தெரியுமா? பள்ளி நாட்களில் சாதிப் பெயரை சொல்லி திட்டிய ஒருவன் மீண்டும் என்னிடம் வந்து நான் மறந்து போன, எனக்கு மரத்துப் போன அந்த நிகழ்விற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டத் தருணம் நான் அத்தனை மகிழ்ச்சி அடைந்தேன். மிரட்சி ஏற்படுத்தும் இருள் வெளிகளில் சிறு வெளிச்சக்கீற்றாய் தென்படும் எங்களின் தேவதூதனாய் உங்களை உணர்ந்த தருணம் அது.
வெகுநாளாய் வளர்த்த தீயில் புடம் போடப்பட்ட வாள் - பரியேறும் பெருமாள்.
உண்மையில் சாதி ஆணவம் தாங்கி நிற்கிற ஒரேயொரு இதயத்தின் நரம்புகளையாவது அறுத்து எறிந்திருப்பான் இந்தப் பரியன்
என்றே தோன்றுகிறது.
அடுத்தது கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் பாண்டிய ராஜாக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாரி.
தாமிரபரணியிலிருந்து தப்பித்து வந்த மாரி செல்வராஜை ராம் எனும் பெருங்கலைஞன் கண்டெடுத்த

மறக்கவே நினைக்கிறேன் தொடரை இப்படியொரு கவிதையோடு நீங்கள் முடித்திருந்தீர்கள் மாரி அண்ணா..
"சிலுவையில் அறையப்பட்டவன் என்பதற்காக என்னைக் கர்த்தராக நினைத்து
நீங்கள் காதலித்திருந்தால்,
கவிதை எழுதியிருந்தால்,
கண்ணீர் வடித்திருந்தால்,
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுவானென்று
காத்திருந்தால்...
எதற்கும் நான் பொறுப்பில்லை!
ஏனெனில், அந்தக்
கர்த்தருக்குப் பக்கத்தில்
எந்தப் பிரார்த்தனையுமின்றி
அறையப்பட்ட
இரண்டு திருடர்களில் ஒருவனாகக்கூட நானிருக்கலாம்! "
எங்களைப் பொறுத்தவரை நீங்கள் திருடன் இல்லை மாரி அண்ணா.
மீட்பன்.
திசை தெரியாமல் அடக்குமுறைக்கு பயந்து சுற்றித் திரிந்த எங்களை மீட்க வந்த மீட்பன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரியா.!

அருமையான பதிவு தம்பீ... 😍😍😍💝💝💝💝
ReplyDelete