JEE மற்றும் NEET தேர்வுகள் ஒன்று தானா ?
பொதுவான அரசியல் அடிப்படைகள், இட ஒதுக்கீடு பற்றிய அறிவு, மத்திய அரசின் பட்டியல் மாநில அரசின் பட்டியல் எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் வெறும் யூட்யூப் வீடியோக்கள் மற்றும் கட்சி அறிக்கைகளை வைத்துக் கொண்டு கேள்வி கேட்கும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. நீட் விவகாரத்தில் அவர்களின் முக்கிய கேள்வியில் ஒன்றாக இருப்பது மத்திய அரசின் IIT JEE தேர்வினை இத்தனை ஆண்டுகள் எதிர்க்காத தமிழகம் (!) ஏன் NEET தேர்வினை மட்டும் எதிர்க்கிறது என்பது தான். மேம்போக்காக பார்த்தால் "அட ஆமால்ல" என்று சற்று அநீதியின் பக்கம் நின்று யோசிக்க வைக்கும் இந்த கேள்விக்கு விடையளிக்கவே இந்த கட்டுரை. தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். கருத்தியல் அளவில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் படிப்பதற்கான சூழலையும், சாத்தியங்களையும் உருவாக்க வேண்டும், அது தான் உண்மையான சமூக நீதி. JEE Main / JEE Advanced என்பது ஐ.ஐ.டி மாதிரியான நேரடி ஒன்றிய அரசின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கும், ஒன்றியம் சொல்லும் டாப் பொறியியல் கல்லூரிகளும் (அதுவும் விருப்பபட்டு) பொருந்தும் ஒரு தகுதி தேர்வு. JEE Advance...

