2019- என்னளவில் ஒரு பார்வை
2019 - இலக்கில்லாமல் சென்று கொண்டிருந்த வாழ்வு சற்று மடை மாற்றப்பட்டு எழுத்து, புத்தகம், வேற்று மொழி சினிமா என்று புதிய பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. சக மாணவர்கள், சீனியர், ஜூனியர்கள் என்னை எப்போதும் ஒரு படி மேல் வைத்து பார்ப்பதாக உணர்வு ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் பல முக்கிய சந்தர்ப்பங்களில், விவாதங்களில் என் கருத்தையும் மதித்து கேட்கின்றனர். சில சமயங்களில் இவையனைத்தும் வெறும் சல்ஜாப்பு என்றே தோன்றுகிறது. உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஜெயகாந்தனுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். தன்மானத்தையும் சுயமரியாதையையும் எழுத்தின் மூலம் விதைத்த ஆசான் அவர் தான்.
இந்த ஆண்டு தான் எழுத்தை ஒரு பொழுதுபோக்காக அணுகாமல் சீரியசாக அணுகியுள்ளேன். பேஸ்புக்கில் கிறுக்கிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து தனியாக ப்ளாக் ஒன்றை ஆரம்பித்தது 2018ன் இறுதியில் தான். ஆனால், ப்ளாக்கை முழுமூச்சாக செயல்பட்டது இந்த ஆண்டு தான்.
106 புத்தகங்கள், 50+ திரைப்படங்கள், நிறைய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், மருத்துவர்களின் தொடர்பு, விகடனில் மட்டும் மருத்துவம், சினிமா, விளையாட்டு சார்ந்து எழுதிய 80 கட்டுரைகள், மற்ற இதழ்களுக்காக எழுதிய 40 மருத்துவக் கட்டுரைகள். படித்த இலக்கியங்கள், பார்த்த சினிமாக்களை பற்றி மட்டும் எழுதுவதற்கு தொடங்கிய தனி Blog, இலக்கிய இதழில் பிரசுரிக்கப்பட்ட முதல் சிறுகதை, விகடனின் சிறந்த மாணவ நிருபருக்கான விருது, trell website நடத்திய எழுத்துப்போட்டியில் இந்தியளவில் மூன்றாமிடம், வாழ்வில் முதன்முறையாக போஸ்ட் மார்ட்டம் பார்த்த தருணம், என பலதரப்பட்ட அனுபவங்களோடு வாழ்வின் ஓர் முக்கிய வருடமாக 2019 கடந்திருக்கிறது.
எத்தனை துன்பங்களைக் கடந்தாலும் இருத்தலுக்கான நியதியை ஒவ்வொரு கணங்களிலும் இயற்கை வழங்கிக் கொண்டே தான் இருக்கிறது.
வாழ், மற்றவை அதனதன் போக்கில் நிகழும் !!
புத்தாண்டு வாழ்த்துகள், சியர்ஸ் ❤️❤️

Comments
Post a Comment