எனக்குப் பூனைகளைப் பிடிக்காது - சிறுகதை

வாசிக்கக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல சிறுகதை எழுத கிட்டத்தட்ட 20 கிறுக்கல்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதுவரை கிறுக்கியவற்றுள் சிறந்ததாகப்படுவது இதுதான். இம்மாத பதாகை இதழில் வெளியாகி உள்ளது.


~~ 

எனக்குப் பூனைகளைப் பிடிக்காது - சிறுகதை

நல்ல இரவு எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச் செல்லும் பொந்திலிருந்து நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான்எனது அப்பாவும்அம்மாவும்நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள்ஆனால் குரல் எழவில்லைதிடீரென ஒரு கரு வெள்ளம்கருத்தகொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை என் மீது பாய்ந்ததுகத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் அவை என்னை பற்களால் இழுத்து வெளியே போட்டனஅவை அனைத்தும் ஒரே மாதிரி இருந்தனஒரே மாதிரி கண்கள்மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்பூண்டு போல்நடுவில் மட்டும் ஒரு சிறிய கரிய தீற்றல்ஊசி நகங்களும் கோரப் பற்களும் காவு கொள்ளத் தயாராகின்றனமரண பயத்தில் பரிதவிப்புடன் அவர்களைப் பார்க்கிறேன்என்னைக் கைவிட்டவர்களுடன் சேர்ந்து நானும் புன்னகைத்தபடி நிற்கிறேன்.
நெடு நாட்களுக்குப் பிறகு வந்தது இப்படியொரு கனவுஎழுந்து அமர்ந்தேன்நான் A-block 52வது அறையில் இருக்கிறேன் என்று உணர சிறிது நேரம் பிடித்ததுதூக்கம் வரவில்லைதண்ணீர் குடித்தால் தேவலாம் எனத் தோன்றியதுஆனால்எழுந்து அவ்வளவு தூரம் தனியே நடந்து மெஸ்ஸிற்குச் செல்ல வேண்டும்பயம்.
எனக்கு தூக்கத்தின் மூன்றாம் சுழற்சியில் இருந்த தினேஷை எழுப்பிக் கூற வேண்டும் போலிருந்தது.
எனக்கு பூனைகளை பிடிக்காது”
எனக்கு இந்த உலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பிக் கூற வேண்டும் போல இருந்ததுயாருமற்ற அந்த பின்னிரவில் என்னிடமே நான் பேசத் தொடங்கினேன்
எனக்கு பூனைகளை பிடிக்காது”
ஏன்?”
தெரியாதுகாரணமில்லாமல் வெறுக்கக் கூடாதா?”
இல்லை.”
அவை அருவருப்பாக இருக்கின்றன.”
பொய்.”
உண்மை.”
இல்லை
” சரிபொய்எனக்குப் பூனைகளைப் பார்த்தால் அந்தக் கிழவனின் ஞாபகம் வந்து தொலைக்கிறதுஅவன் ஆளும் மூஞ்சியும் சிரிப்பும்.”
யார் ?”
தினமும் சரியாக காலை ஏழரை மணிக்கெல்லாம் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பான்.
அப்பொழுது எனக்கு அல்லது வயதுஅது ஒரு நீளமான காம்பவுண்ட்அதன் கடைசியில் தான் எங்கள் வீடுவாசலில் இருந்து பார்த்தாலே தெரியும்காலையில் கார்பரேஷன் தண்ணீர் வரும்போது தான் குளித்தாக வேண்டும்காம்பவுண்ட் பாதையில் எங்கள் வீட்டிற்கு வெளியே நின்றுதான் குளிப்பேன்இல்லை நிற்பேன்அம்மா தான் என் மேல் தண்ணீர் கொட்டிசோப்பு தேய்த்து விடுவார்கள்மோப்பம் பிடித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்.
அவனது முகம் கோணல் வாயுடைய கிழட்டுப் பூனையைப் போல இருக்கும்காதுகள் மட்டும் ஓநாயுடையவைமுள்ளு முள்ளாக மீசை வைத்துக் கொண்டுநரைத்த தலையுடன் குட்டையாக இருப்பான்வெள்ளை வேட்டியும் சட்டையும் தான் எப்பொழுதும்அருகில் இருந்த காளிமார்க் சோடா கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
குளித்து யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு வெளியே ஸ்கூல் வேனிற்காக எங்கள் பக்கத்து காம்பவுண்ட் படியில் அமர்ந்து கொண்டிருக்கும் போதுஎன் அருகில் தவறாமல் வந்து அமர்வான்.
அவன் என்னிடம் பேசியதெல்லாம் ஒரே வாக்கியம்சிரித்தது ஒரே மாதிரி சிரிப்புபார்த்தது ஒரே மாதிரி பார்வை.
உன் குஞ்சுமணியை எனக்குத் தருவியா?”
நான் பதிலே பேச மாட்டேன்.
ஒரே ஒரு முறை “ என் கிட்ட குஞ்சு மணி கிடையாது” என்றேன் எரிச்சலுடன்.
நான் இதுவரை கேட்டதிலேயே மிக அசிங்கமான ஒரு சிரிப்பை சிரித்தான்.
குளிக்கறப்ப ஆடுதுலஅது பேரு என்னது?”
நான் ஒண்ணும் குளிக்கலைஉள்ள என்னைய மாதிரியே ஒரு பையன் இருக்கான்அப்படியே என்னை மாதிரிஅவன் கிட்ட தான் அது இருக்கு”
திரும்பவும் அசலாக அதே கிழட்டுப் பூனையின் சிரிப்பு.
லூசு தாத்தா” என்றேன் மகா எரிச்சலுடன்.
அவன் பேசியதில் என்ன அப்படி தப்பாக இருந்துவிட்டதுசத்தியமாகத் தெரியவில்லைஆனால் ஏனோ ஒரு எரிச்சல்ஏதோ காய்ந்த சாக்கடையின் வண்டையில் போட்டு புரட்டியது போல்.
இனி என்னால் நிறுத்த முடியாது,சொல்லித்தான் ஆக வேண்டும்.”
சொல்
எனக்கு குடோன்களையும் super heroக்களையும் கூட பிடிக்காது.”
ஏன் ?”
அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்என் வீடு இருந்த இடம் ஒரு நகரின் மிக முக்கியமான மையம்அங்கே எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கும்கார்கள்பஸ்கள்ஆட்டோக்கள்டூ வீலர்கள்சைக்கிள்கள்ரிக்‌ஷாக்கள்மனிதர்கள்எப்போதாவதுதலைக்கு மேல் கொஞ்சூண்டு தெரியும் வானம் போலதெரியாமல் விழுந்து விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டே விழும் தூறல் போலஅருகில் அணி வகுத்திருந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் இருந்து யாராவது எட்டிப் பார்த்து சிரிப்பார்கள்அதிர்ஷ்டம் இருந்தால்ப்ளாஸ்டிக் ஸ்டம்ப்பையும்பேட்டையும் பாலையும் வைத்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டுக்குள் தனியாக வேர்ல்ட் கப் ஆடிக் கொண்டிருக்கும் என் மேல் பாவப்பட்டு வந்து இரண்டு ஓவர்கள் விளையாடுவார்கள்என் வயதையொத்த யாரும் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடையாதுஅந்த ரோட்டில் மொத்தம் இருந்தது பத்து வீடுகள்ஆனால் மூன்னூறு கடைகள் வரிசை கட்டி நின்றனஆட்டோமொபைல்டிராக்டர்எலெக்ட்ரானிக்ஸ்மெக்கானிகல் உதிரி சாமான்கள் விற்கும் கடைகள்.
அன்று சரியான வெயில்.
நடு நிசியில் உறங்கிக் கொண்டிருந்தது அந்த காட்டின் வாயிலில் இருந்த கிராமம்நிலா இல்லாத வானத்தின் கீழ்குதிரைகளுடன் படையெடுத்து வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஊரை சூறையாடினர்நகைபணம்பாத்திரங்கள் என அனைத்தையும் எடுத்து சுருட்டிக் கொண்டுஎதிரில் பட்டவர்களை வெட்டி வீழ்த்திஊரை தீயிட்டுக் கொளுத்தி தப்பித்துச் சென்று கொண்டிருந்தனர்.
இரும்புக்கை மாயாவியான நான் தான் அந்த ஊரின் ஒரே போலீஸ்எதுவுமே அறியாமல் எனது குகையில் தூங்கிக் கொண்டிருந்தேன்யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள்ஊர் கொள்ளை போனது என்று கதறினார்கள்.
வெகுண்டெழுந்த நான்கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகமூடியாக்கிக் கொண்டு சீறிப் புறப்பட்டேன்கயவர்களை அழிக்கமலை மேல் ஓடிச்சென்று பார்த்தேன்வெகு தூரத்தில் அவர்களின் தீப்பந்தங்கள் தெரிந்தனஎனது குதிரையை முடுக்கி விட்டு துரத்தினேன்.
இதோநெருங்கி விட்டேன்!
என்ன செய்கிறேன் பார்நான் இருக்கும்போதே இவ்வளவு தைரியமாமுதுகில் இருந்து ஈட்டியை உருவி வீசினேன்.
அம்மா!” என்ற அலறலுடன் சரிந்தது ஒரு குதிரையும் அதன் சுமையும்.
இன்னும் 50 பேராவது இருப்பார்கள்.
பாவம் நீங்கள்என் கையிலா வந்து சிக்க வேண்டும்ஹாஹாஹா!”
கழுத்து முறியும் சத்தம்குதிரையின் கால் முறிந்து கத்தும் சத்தம்மரங்கள் உடையும் சத்தம்இடி வெடிக்கும் சத்தம்.
எனது இரும்புக்கை பட்டவுடன் நொறுங்கித் தூள் தூளாகிப் போய்க் கிடந்தது மொத்த படையும்.
அதோஒருவன் பதுங்கிச் செல்கிறான்கோழை!
நீ கொடுத்து வைத்தவன்என் கையால் சாகப் போகிறாய்!”
மூச்சிழுத்து ஓங்கிய எனது கைமுழு வேகத்துடன் சென்று மெதுவாக இறங்கியது ஒரு நிஜ வயிற்றில்.
ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய்எனது முகமூடியை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டேன்.
ஐய்யோவிளையாட்டு ஆர்வத்தில் வாசல் வரை கண் மண் தெரியாமல் வந்து விட்டேன்.
யாருடைய வயிறு இது?”
செபாஸ்டியன்பக்கத்துக் கடையில் வேலை பார்க்கும் அண்ணன்என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடும்மேட்ச் பார்க்கும் நல்லவர். 16லிருந்து 19 வயதிற்குள் இருக்கும்அவனுக்கு பூனை மீசை துளிர்த்திருந்தது.
ஆம்எனக்கு பூனைகளைப் பிடிக்காது
அந்த கணத்தில் வெறும் டிரவுசர் மட்டும் அணிந்துஅதற்குத் துணையாக அரைஞான் கயிறும் கட்டியிருந்தேன்.
என்னடாசட்டை போடாம சுத்திட்டு இருக்க?” என்றபடியே எனது நெஞ்சுக் காம்பை பிடித்து நன்றாக ஸ்க்ரூவை திருகுவது போல திருகி விட்டான் அவன்வலி சுர்ரென்று உச்சந்தலை வரை போனது.
வலிக்குதுண்ணே!” என்று கத்தினேன்.
எங்கள் காம்பவுண்டை ஒட்டியபடி இருந்த ஒரு சிறிய சந்தினுள் இருந்தது அவன் வேலை பார்த்த குடவுன்அங்கே குவியல் குவியலாக இரும்புப் பட்டைகளை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள்.
என்னைத் தனது இரும்புக்கரங்களால் தூக்கிக் கொண்டு சென்றான்நான் தாவிக் குதிக்கத் துள்ளினேன்இரும்புப் பிடிவேகமாக என்னை இரு கைகளிலும் தூக்கிஅவன் உடலோடு அணைத்துக் கொண்டு (நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த இரும்பு வியர்வையின் வாசம்வேகமாகச் சென்று என்னை அந்த குடவுனுக்குள் தூக்கி வீசினான்பட்டைகள் தேய்த்துத் தேய்த்து பிளந்திருந்த தரை என் முதுகை சிராய்த்தது.
சடாரென்று கதவை மூடினான்ஜன்னல்களற்ற அறையின் இருட்டு எங்களை விழுங்கியதுபொதுவாக குடவுன்களில் மின்சார இணைப்பும் இருப்பதில்லைதீக்குச்சியை பற்ற வைத்து என் கண்களுக்கருகே கொண்டு வந்தான்.
தீக்குச்சி அணைந்து போனது.எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
புது குச்சிஎனக்கு ஏதோ விபரீதம் என்று புரிய ஆரம்பித்ததுநான் பயந்து கண்களை மூடிக் கொண்டேன்கன்னத்தில் பளார் என்ற அறையுடன் மயங்கினேன்.
செபாஸ்டியன்” என்று வெகு தூரத்தில்பல மைல்களுக்கு அப்பால் இருந்து யாரோ கூப்பிட்டார்கள்அந்த கூச்சலில் தான் கண் விழித்தேன்சில நொடிகளில் கதவு திறந்து ஒரு உருவம் வெளியேறியதுகதவு தாழிடப்பட்டதுஒரு வகை அருவருக்கத்தக்கபனம்பூவின் நெடியை உண்டாக்கக்கூடிய நாற்றம் உடல் முழுவதும் பரவியிருந்ததுகுமட்டிக் கொண்டு வந்ததுகூடவே செபாஸ்டியனும் கதவைத் திறந்து வந்தான்மறுபடியும் இருட்டு.
அதன்பின் இருட்டு என் வாழ்வை விட்டு விலகவே இல்லை,அந்த நொடியில் தான் ஒரு பூனையின் குரூர சிரிப்பைப் போல இருட்டும் எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கத் தொடங்கியது.
அந்த மூச்சுமுட்டும் இருட்டில்பிசுபிசுத்த நெடியில்இரும்பாலான ஒரு அறையில்புழுவைப் போல கிடந்த எனக்கு எதுவும் புரியவில்லைஆனால் நான் வெறுத்தேன்கடவுள்களை, super heroக்களைஇரும்புக் கைகளைமுக்கியமாக பூனைகளை.
பல ஆண்டுகள் அங்கேயே கிடந்தேன்கத்த வேண்டும் என்று கூட தோன்றவில்லைஎதிர்க்கத் திராணியற்ற ஒரு செடியைப் போலவலுவற்ற ஒரு நோஞ்சானைப் போலசெத்துப்போன ஒரு சிலையைப் போலதற்காத்துக் கொள்ள லாயக்கில்லாத முதுகெலும்பற்ற ஒரு கோழையைப் போல.
பல வருடங்கள் கழித்துஏதோ புத்தகத்தில் ‘இரும்பு மனிதர்’ என்றிருந்ததை பார்த்தவுடன் எழுதத் தோன்றியது,
இரும்பின் அர்த்தம் வலிமையல்லஅதிகாரமும் அத்துமீறலும்.”
இரும்பாலானது இந்த அறைஇந்த ஊர்இவ்வுலகு

Comments