காவல் - முதல் சிறுகதை முயற்சி
சிறுகதைகளை படிப்பதன் முதன் விளைவு சிறுகதைகளை எழுதிப்பார்த்து நமக்கு நாமே பாராட்டு சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசை தான். நான் எழுதிய இந்த சிறுகதையும் புதுமைப் பித்தனில் தொடங்கி இப்போது இருக்கும் ரைட்டர் சிஎஸ்கே வின் சிறுகதைகளை படித்ததன் பொருட்டு ஏற்பட்ட அரிப்பே அன்றி வேறொன்றும் இல்லை..
காவல் - முதல் சிறுகதை முயற்சி
"அந்தக் கண்டாரோலியை எப்படியாச்சு இன்னிக்கு புடிச்சிரனும்,இன்னிக்கு அது முடியலைன்னா இனிமேல் இந்த டேசன்ல நிம்மதியா வேலை பாத்துட்டு இருக்க முடியாது. புள்ளக்குட்டியளோட ஒரு நா நிம்மதியா இருக்க முடியுதா, தேவடியாப்பய மாசத்துக்கு நாலைஞ்சு தரம் ஏழரைய இழுத்துர்ரான்"
அரைத்தூக்கத்தில் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் எதுவும் சொல்லாமல் சப் இன்ஸ்பெக்டரின் பேச்சைக் கேட்டவாரு இருந்தார்கள். நடுநிசியின் இருட்டைக் கிழித்தவாறு அவர்களின் ஜீப் போய்க் கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் வயல்கள், வண்டியின் வெளிச்சம் பாய்ந்த இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் கும்மிருட்டு, திறந்திருந்த ஜன்னல்களின் வழியே வாடைக்காற்று முகத்தில் அப்பியது. தவளைச்சத்தம் மட்டும் ஓயாமல் கேட்டுக்கொண்டு இருந்தது, இரண்டு கிலோமீட்டர்களுக்கு ஒரு முறை ஒரே ஒரு தெருவிளக்கு நின்று கொண்டிருந்தது.
"மணி என்னவே இருக்கும் !"
"இரண்டரை இருக்கும் சார்"
"சீக்கிரம் போயா, நாலு மணிக்குள்ள அவன புடிச்சா தான் உண்டு, இவ்ளோ தூரம் வந்து புடிக்காம போனா, ராத்திரி ஃபுல்லா எவக்கூட கெடந்தனு இன்ஸ்பெக்டர் நாக்கூசாம கேப்பான்"
டிரைவர் அவர் சொன்னபிறகு உடலை முறுக்காக வைத்துக் கொண்டான், தலையை உயர்த்தி ஸ்டியரிங்கை டைட்டாக பிடித்துக் கொண்டான், இருப்பினும் வண்டியின் வேகத்தில் ஒரு மாற்றமும் இல்லை. அவனும் இந்த இரண்டு வருடங்களில் எல்லாவற்றையும் பழகியிருந்தான். இந்த ரோட்டில் வண்டியின் வேகத்தை இதற்கு மேல் கூட்டக்கூடாது, டையர் பஞ்சரானால் அவ்வளவு தான், மயிரே போச்சுனு சும்மா இருப்பாங்க இவன் ஒற்றை ஆளாக டயரை மாற்றிக்கொண்டிருப்பான். அவனின் அனுபவம் அவனை இவ்வாறு செலுத்தியது.
இரண்டு கீலோமீட்டருக்கு ஒரு தரம் தோன்றும் தெரு விளக்கின் வருகை நின்று போயிருந்தது. இன்னும் ஒரிரண்டு கிலோ மீட்டர்களில் அவர்கள் அடையப்போகும் இடம் வரவிருந்தது.
~
ஸ்கூல் அப்போதுதான் விட்டிருந்தது. சேரன் துள்ளிக் குதித்து வெளியே வந்தான். நாளைக்கும் நாளை மறுநாளும் விடுமுறை நினைத்தாலே உற்சாகம் ஊற்றெடுத்தது சேரனுக்கு,
"ரோஸ் டீச்சர் கொடுத்த வீட்டுப்பாடத்தை மறக்கக்கூடாது" என்பதில் தெளிவாக இருந்தான்.
ஒரு வேளை மறந்தால்!!
அவரின் அடியை நினைத்தாலே அவனுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. வீட்டுப்பாடத்தை யோசித்துப் பார்த்துக்கொண்டே கேட்டில் நின்று அப்பாவைத் தேடினான். எப்போதும் நிற்கும் புங்கை மரத்தின் கீழ் அவர் நிற்கவில்லை. மாறாக வேறொரு இடத்தில் நின்றார், அப்பாவிடம் ஓடிச்சென்று வண்டியில் ஏறினான். வீட்டிற்கு போகும் வழியெங்கும் வீட்டுப்பாடத்தை பற்றிய பேச்சே அவனிடம் இருந்து வந்தது. வாகனங்களில் இரைச்சலில் எதற்கும் மறுமொழி பேசாமல் ம்ம் கொட்டிக் கொண்டே வந்தார் அவன் அப்பா.இதுவே அவனுக்கு போதுமானதாய் இருந்தது. வீட்டுப்பாடத்தை மறந்து விடுமுறையை யோசிக்கத் தொடங்கினான் சேரன்.
~
சப் இன்ஸ்பெக்டர் வாய்க்காலின் வண்டியை தெற்குப் பகுதியில் நிறுத்த சொன்னார். அவரின் பேச்சைக் கேட்காமல் கொஞ்சம் தள்ளி அடர்த்தியாக வளர்ந்திருந்த பன்னீர்ப்பூ மரத்தின் பின் நிறுத்தினார் டிரைவர்.
"ஏன் இங்க நிப்பாட்டின ?"
"இல்ல யா, வாய்க்கா பக்கத்துல குடிசை, பம்புசெட்டுனு எல்லாம் இருக்கு. அப்படி இருக்குற எடம் நமக்கு தோதா இருக்காது, அதான் இங்க நிறுத்தினேன்"
டிரைவரின் பதிலில் இருந்த நியாயத்தை உணர்ந்த எஸ்.ஐ வேறெதுவும் பேசவில்லை. டிரைவர் தவிர மற்ற மூவரும் உடலைத் தளர்த்திக் கொண்டு இறங்கினார்கள். வண்டிக்கு முன்னும் பின்னும் இரண்டு பன்னீர்பூ மரங்கள் விஸ்தாரமாய் வளர்ந்திருந்தது. அதன் இலைகளின் அடர்த்தியை அந்த இருட்டிலும் காணமுடிந்தது.
யோவ், வந்த இன்ஃபர்மேஷன் கரெக்ட்டு தான ?
பெர்ஃபக்ட் சார், தைரியமா போகலாம் என்று ஒரு ஏட்டு பதிலளிக்க,
சரி முன்னால போங்க என்று எஸ்.ஐ உத்தரவிட்டார்.
"யோவ் டிரைவர், நீ வண்டியப் பூட்டிட்டு மறவான எடத்துல போய் உக்காந்துக்கோ, யாராச்சும் கேட்டா கக்கூஸ் போக வந்தேன்னு சொல்லு, போலீஸ்ன்ற பந்தா காமிக்காத, போன சைலன்ட்ல போட்டு பேன்ட் பாக்கெட்டுல வச்சுக்கோ"
டிரைவர் இவர்களை கடந்து வரப்பின் ஓரத்தில் ஓதுங்கிய பிறகு மூவரும் அந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
~
சேரன் வீட்டில் எப்போதும் நிலைத்திருக்கும் அமைதியில்லை. அவன் சென்ற போது அம்மா எதையோ பரபரப்பாக தேடிக் கொண்டிருந்தாள். அப்பா அவனை வீட்டில் இறக்கிவிட்டு வெளியே சென்றிருந்தார். எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் டிவி அணைக்கப்பட்டிருந்தது. வீட்டில் எல்லாம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தது, அட்டைப் பெட்டியில் எதையோ வைத்து பரணில் அடுக்கிக் கொண்டிருந்தாள் அம்மா. பொறுத்துக்கொள்ள முடியாத அமைதி ஏதோ நிகழந்ததை அல்லது நிகழவிருப்பதை அந்த மழலைக்கு சொல்லியது.
நேரம் கடந்தது
"எல்லாம் எடுத்து வச்சிட்டியா ?"
"நைட்டு பதினொன்னுக்கு மேல கெளம்புனா சரியா இருக்கும்ல ?"
ம்ம், சேரன் எதுவும் கேட்டானா ?
"இல்ல நீங்க விட்டுட்டு போனதுல இருந்து, புக்கையே பாத்துட்டு இருந்தான். இப்பதான் சாப்பிட கொடுத்து, தூங்க வச்சேன்."
"சரி, நா போய் இன்னொரு தடவ கோயில்பிள்ளைட்ட சொல்லிட்டு வந்திருதேன், கெளம்புதோம்னு"
"எத்தன வாட்டி சொல்லுவ, கொஞ்ச நேரம் வீட்ல இரு."
"யே, ஆறுமாசமோ, ஒரு வருசமோ எப்ப வருவோம்னு தெரியாது. அதுவரைக்கும் இந்த வீட்ட யாரு பாக்குறது, அந்தாளு பாத்துக்கிறேன்னு சம்மதிச்சதே பெருசு, போய் சொல்லிட்டு வரேன் டி"
சரியாக பதினொன்றை மணிக்கு அவர்கள் வீட்டை விட்டு கிளம்பினார்கள்
"எங்கப்பா போறோம், ஏன் ஆட்டோல போவல ?"
தூக்கக் கலக்கத்தில் கேட்ட சேரனிடம் பதில் சொல்லாமல் நடப்பதிலேயே தீவிரம் காட்டினார் அவன் அப்பா. அம்மாவோ முகத்தை அஷ்டக் கோணலாக்கி அவரை பின்தொடர்ந்தார். அடித்த மிதமான வாடைக்காற்றும் நிலவின் ஒளியும் சேரனுக்கு அவன் அப்பாவின் தோளில் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கியது.
~
இன்னும் அரைக் கிலோமீட்டர்கள் நடந்துசென்றால் அவர்கள் தேடிய இடம் வந்துவிடும் என ஒரு கான்ஸ்டபிள் கூறினான். பூட்ஸ் சத்தம் மட்டும் தனித்துக் கேட்டுக் கொண்டே வந்தது. மூச்சுவிடும் சத்தம் மூவருக்கும் தெளிவாகக் கேட்டது. முழுக்கவும் ஆள் அரவமற்ற இடத்தில் நடந்துசென்றனர்.
"இந்தக்கரையக் கடந்துதான் அவன் போவானா?" என்ற எஸ்.ஐ யின் கேள்விக்கு,
"ஆமா சார், இன்ஃபார்மர் சொன்ன எடம் இதுதான், கண்டிப்பா வருவான் சார்!!" என்று ஒரு கான்ஸ்டபிள் பதிலளித்தார்.
"நம்ம ஒன்னா இருக்க வேணாம், தனிதனியா இருப்போம். இது பூரா பொதமணலு தான் ஈஸியா குழி தோண்டிர்லாம், வர்ற வழியில இரண்டு குழியத் தோண்டுங்க, மொதல்ல இருக்க பொதருல நீ இரு, இரண்டாவதுல இவன் இருப்பான், பின்னாடி நான் இருப்பேன். மொத பொதர தாண்டி வந்ததும், குழியில கால் மாட்டும் அப்போ இவன் வந்து புடிப்பான், நீ மொத பொதருல இருந்து வந்து புடி, நான் கடைசியா புடிச்சிருதேன். ரெண்டாவது பொதருல இருக்குறவன் புடிக்கிறதுல தான் எல்லாம் இருக்கு, டைமிங் முக்கியம்டே" என்ற எஸ்.ஐயின் திட்டத்திற்கு இருவரும் தலையசைத்தார்கள்.
வெகு விரைவாக குழி தோண்டி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதர்களில் மூவரும் ஒளிந்து கொண்டார்கள்.
மணி மூன்றரையைத் தொட்டது.
~
சேரன், அவன் அப்பா, அம்மா மூவரும். ஆத்துப்பாலம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடக்கத்தொடங்கினார்கள்.
முட்டிவரை ஆழம் இருக்கும் ஆற்றைக் கடந்து, அக்கரையில் இருக்கும் ஊரில் வேறொரு பஸ் ஏறி மதுரை செல்லும் திட்டத்தை அம்மாவிடம் அப்பா விளக்க, அதை தூக்கத்தில் மங்கலாக கேட்டுக் கொண்டிருந்தான் சேரன்.
ஆற்றின் கரையில் வண்டிப்பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மஞ்சள் பிழம்பு தோன்றியது. போலீஸ் வண்டி, நாலைந்து தடியன்கள் போல் நின்ற போலீஸோடு கோயில் பிள்ளையும் நின்றார்.
சேரன் அப்பாவின் பின்மண்டையில் அடி பலமாக விழுந்தது, அவர் பிடியில் இருந்து நழுவி சேரன் ஐந்தடி தள்ளிப் போய் விழுந்தான்.
சேரன் கண்விழித்த போது அப்பா ஒரு ஓரமாக ரத்தக்கறைகளுடன் கிடந்தார். அம்மா காணக்கூடாத கோலத்தில் உதட்டில் ரத்தம் வழிந்தவாறு நின்றாள். அவளின் பிடரிமயிரை அங்கு நின்ற போலீஸ் ஒருவன் பிடித்திருந்தான்.
சேரனை அம்மா ஓடச் சொன்னாள். ஓடினான். இல்லை இல்லை துரத்தப்பட்டான். இரவில் வெள்ளி ஓடையாய் தெரியும் ஆற்றை நோக்கி துரத்துப்பட்டு அதனுள் விழுந்தான். அவனின் அப்பாஆஆ என்ற குரல் ஆற்றின் ஆழத்திற்கு சென்றும் எதிரொலித்தது.
~
அவன் வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. சற்று மெலிந்த தேகம் ஆனால் வன்மை குன்றாத கைகள், இடது பக்கம் சற்று சரிந்து நடக்கும் விசித்திரமான நடை. அவனின் நடையில் ஒரு எச்சரிக்கை இருந்தது. இருட்டில் நம்மீது யாரேனும் பாய்ந்து விடக்கூடும் என்று எதிர்பார்ப்பவனைப் போல எதற்கும் தயாரான ஒரு உடல் மொழி இருந்தது.
கொஞ்ச தூரம் நடந்து வந்தபின் நின்றான். "இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டானோ" என்ற பயம் ஒரே சமயம் மூவருக்குள். அந்த சமயம் ஒரு பெண்ணின் பேச்சுக்குரல் கேட்டது. அவளிடம் ஏதோ சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான். தூரம் குறையத் தொடங்கியது. எஸ்.ஐ அந்தப் பெண் உள்ளே வந்து ஏதும் குளறுபடி செய்துவிட்டால் என்று யோசிக்கத் தொடங்கினான். இனிமேல் யோசித்துப் பயனில்லை. யோசித்து முடித்தக் கணத்தில் அவனின் கால் அவர்கள் வெட்டிவைத்த குழியில் சிக்கியது. முதல் கான்ஸ்டபிள் பாய்ந்து அவனை மணலில் சரித்தான். உத்தேசித்தது போல மீதி இருவரும் அவனின் மேல் விழுந்து அவனைக் கட்டுக்குள் கொண்டு வர யத்தனித்த போது அவன் முட்டியை வைத்து கான்ஸ்டபிளின் முகத்தை பதம் பார்த்தான். அதற்குள் எந்த எச்சரிக்கை ஒளியும் எழுப்பாமல் அந்தப் பெண் கத்தியோடு எஸ்ஐ மீது பாய்ந்தாள். தோள் பகுதியில் ஆழமான வெட்டு. ரத்தம் குபுகுபுவென்று வந்தது. கையை அசைக்க முடியவில்லை. அந்த இடைவெளியில் இரு கான்ஸ்டபிள்களும் அவனை மடக்கி பிடித்தனர். எஸ்ஐ ஆத்திரத்தில் அவளின் வயிற்றில் ஓங்கி மிதித்தார். ரத்தப்போக்கு இன்னும் அதிகமாகியது. அவளின் சேலையின் ஒரு பகுதியை கிழித்து ஒரு கான்ஸ்டபிள் வெட்டுப்பட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கட்டினான். திடீரென்று மழை பிடிக்க ஆரம்பித்தது. அந்த பெண்ணின் பிடரி மயிரைப் பிடித்தவாறு "ம்ம் நடக்குறீங்களா இல்ல இங்கயே கொன்னு பொதச்சுறவா?" என்று கேட்ட கான்ஸ்டபிளின் முதுகில் அந்தக் கத்தி இன்னொரு முறை பாய்ந்தது. இருவரையும் வண்டியில் ஏற்றிவிட்டு அந்த போலீஸ் ஜீப் வந்த திசையிலேயே சென்றது.
~
"யோவ் ஒரு எஸ்ஐ ஒரு கான்ஸ்டபிள குத்துனது மட்டும் இல்லாம, டிபார்ட்மண்ட் ஜீப்ப எடுத்துட்டு அக்யூஸ்ட்ட கூட்டிட்டு போயிருக்கான் யா அந்த டிரைவரு. அவனுக்கும் அக்யூஸ்ட்டுக்கும் எதாச்சு லின்க் இருக்கானு பாத்து மதியானத்துக்குள்ள சொல்லுங்க யா ! " என்ற அஸிஸ்டண்ட் கமிஷனரின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்டேஷனில் எப்போதும் இல்லாத பரபரப்பு தொற்றிக் கொண்டது.
"யோவ் அந்த டிரைவர் பேரென்ன சொன்ன?"
அவனிடம் இருந்து தப்பிய கான்ஸ்டபிளிடம் கேட்டார்
"சேரன்" என்ற பதில் கிடைத்தது.

Comments
Post a Comment