ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதையும் திரையாக்கமும் - சில புரிதல்கள்
~
// "எழுத்தாளனுக்கு, கலைஞனுக்கு ஒரு காட்சி எழுதும் பொழுதே அதன் முடிவு தீர்க்கமாக வெளிப்படுகிறது.சிலர் அந்தத் தரிசனத்தைக் கண்டுகொள்ளும் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.அதனால் அந்தக் காட்சியில் பிழை இருப்பதாக அர்த்தமா ? நான் இன்னமும் உறுதியாக சொல்கிறேன். அந்தக் காட்சி மக்களுக்கு புரியாமல், பிடிக்காமல் போயிருந்தாலும் அதுதான் சரியான காட்சி. அந்தக் கதைக்கு அதுதான் கச்சிதமான கதைசொல்லல் என்பது சத்தியம் “
“ எனக்கு முன்னால் பத்து பக்கங்கள் வசனமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்துப்பக்கங்களையும் ஒரு எழுத்தாளராக மிகவும் கவனத்தோடு படிப்படியாக எழுதியிருக்கிறேன்.....”
“ இரண்டு முறை மனப்பாடம் செய்ய முயற்சித்தேன். நான்கு வரிகள் சரியாக சொல்லி முடித்தவுடன் ” அப்பாடா.. இந்த வரிகளை சரியாகச் சொல்லியாயிற்று” என்ற சிந்தனை வருகிறது. அடுத்த வரிகளையும் சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற பயமும் அடுத்து வருகிறது. இப்படியே ஏதாவதொரு சிந்தனை என் மூளையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது என் முகத்திலும் பிரதிபலிக்கிறது.”
“ அந்தப் பத்துபக்க வசனங்களையும் தூக்கியெறிந்தேன். என்னுடைய உதவியாளர்களிடமும் , குழுமியிருக்கிற படப்பிடிப்புக் குழுவினரிடமும் நான் சொன்னது.. “ கேமராவை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எல்லாமே தயாராக இருக்கட்டும். நானும் முன்னால் எனக்கான இடத்தில் அமர்ந்து கொள்கிறேன். கேமரா ஓடட்டும், ஒரே டேக்தான் நடிப்பேன், எவ்வளவு தூரம் அந்தக் காட்சி நன்றாக வருகிறதோ, இல்லையோ, எதுவானாலும் சரி. கதையை ஆரம்பித்துவிட்டு நான்கு வரிகளுக்கு மேல் என்னால் சொல்ல முடியாவிட்டாலும் நான் அப்படியே உட்கார்ந்திருப்பேன். கேமராவை நிறுத்த வேண்டாம். அப்படியே சிறிதுநேரம் இருந்துவிட்டு அக்காட்சியிலிருந்து வெளியே வந்துவிடுகிறேன்.. “
“ கவிதைகளைப் குறித்துச் சொல்கிற போது எழுத்தாளனும் படிப்பவனும் கைகோர்த்துக் கொண்டு அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதுண்டு.” Poetry is half completed, and another half is completed dy the reader.அந்தக் கவிதைக்கு ஈடாகத்தான் என் திரைப்படங்களை வைக்கிறேன் .
“ ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளியான முதல் நாள் திரையரங்க வாசலில் நின்ற பொழுது படம் பார்த்து முடித்து வருகிற பார்வையாளர்கள் என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அந்தக்காட்சியை என் ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்டதை அந்த அரவணைப்பில் உணர்ந்தேன். அங்கிருந்தே என் உதவி இயக்குனர்களைத் திரும்பிப் பார்த்து சொன்னேன். “please never never under estimate audience, they are geniuses, they are collective geniuses” //
மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரையாக்கமும் திரைக்கதையும்' புத்தகத்திலிருந்து..
படத்தின் முதல் ஷாட்டில் காட்டப்படும் ஒரு பாலமும் அதன் மீது கிடக்கும் துப்பாக்கியும் ரத்தமும் இந்தப்படம் ஒரு நகரத்தில் நடக்கப்போகும் ஒரு வன்முறையான இரவை சொல்லப் போகிறது என்பதை அந்த ஒரு ஷாட் சொல்லிவிடுகிறது என்கிறார் மிஷ்கின். இப்படி படத்தின் ஒவ்வொரு ஷாட்டுக்கான காரணங்கள் அதன் திரைமொழிக்கான விளக்கங்கள் ஒரு படத்தை இயக்குவது என்பது விளையாட்டான விஷயமல்ல. அதுவொரு டெடிகேஷன். அதுவொரு உள்ளுணர்வு. அதுவொரு அற்புத ஆர்ட் என்று விளக்கிக் கொண்டே போகிறது இந்த புத்தகம். படம் பண்ணப் போகும் ஒவ்வொரு உதவி இயக்குனருக்கும் மிஷ்கின் நடத்தியிருக்கும் பாடம் இது. இந்த புத்தகம் ஒரு நல்ல முயற்சி. நல்ல உழைப்பு. எந்த ஈகோவும் இல்லாமல் இதை எல்லோரும் தெரிந்து கொள்ளும்படியாய் பகிர்ந்து கொண்டதற்கும் சேர்த்து இயக்குனர் மிஷ்கினிற்கு அன்பும் நன்றியும்.
••
#mustread
#myskkin

Comments
Post a Comment