எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்







~~

ச.தமிழ்ச்செல்வனின் படைப்புலகம் ஒவ்வொரு படைப்பிலும் உலகின் ஒரு பகுதி படைக்கப்படுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒரு உலகைப் படைக்க முயல்கிறது. எனவே, தான் படைப்புலகம் எனப்பட்டிருக்கிறது போலும்! படைப்பு யாதாயினும் அது முற்போக்குப் படைப்போ பிற்போக்குப் படைப்பு – அதில் படைப்பு நுட்பம் (Creative power) வெளிப்படுத்தப் பட்டிருந்தால் அதைப் படைப்பு எனலாம். இத்தகைய, எந்தக் கருத்தியல் நிலை கொண்ட படைப்பாயினும் அது தான் முன்வைக்கும் கருத்தியலின் வழியில்; உருவில்; செயலில் உலகைப் படைக்க முனைகிறது அல்லவா?. இவ்வாறுதான், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளும் ஒரு சமத்துவப் பொதுவுடைமை உலகத்தைச் சமைப்பதைத் தன் கருத்தியல் இலக்காகக் கொண்டுள்ளன. இவர் உருவாக்க விரும்பும் உலகைப் படைக்க ஒற்றைத் தன்மை அல்லது ஒரே வகைமை கொண்ட படைப்புகளால் இயலாது என்று எண்ணித்தான், பன்முகத்தன்மை அல்லது பன்முக வகைமைகள் கொண்ட படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ‘இவரின் படைப்புக்கொள்கை’ என வரையறுக்கலாம்.

தமிழ்ச்செல்வன் தனது முப்பதுக்கும் அதிகமான கதைகளின் ஊடாக கரிசல் மண்ணையும் வறுமைப் பிடிக்குள்ளகப்பட்ட விதம் விதமான ஆண் பெண்களையும் சின்னஞ்சிறுவர்களின் ஆசை அபிலாஷைகளையும் காதல்வயப்பட்ட உள்ளங்களின் தகிப்பையும் தவிப்பையும் உறவின் விரிசல்களையும் கலாபூர்வமாகச் சித்தரித்தவர். பாசாங்கற்ற இயல்பான மொழிநடையில் வாசகனை நோக்கி மழைபோல நேரடியாகப் பொழியும் ச.த.வின் கதைகள், உரையாடல் எளிமையையும் கூர்மையான அங்கதத்தையும் தன்னளவில் கொண்டவை.

பிறந்தநாள் வாழ்த்துகள் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ❤️

••

Comments