தரமணி - பேரன்பின் ஆதிஊற்று
இயக்குநர் ராமின் படங்களிலேயே தரமணி மனதிற்கு மிகவும் நெருக்கமானது. தான் வாசித்த இலக்கியங்களைக் கொண்டு சீன்களை அழகாக ஃப்ரேம் செய்திருப்பார். "கவிதைகளை அதிகம் வாசித்து படம் பண்ணா, எடிட்டிங்ல நெறைய வேலை இருக்காது, கவிஞர் தான் இந்த உலகத்தோட முதல் எடிட்டர்" கூகைத் திரைப்படக் கூட விழாவில் ராம் சொன்ன வார்த்தைகள் இவை. Metaphor என்று சொல்லப்படும் உருவகங்களைக் கொண்டு தரமணியில் ராம் வைத்த காட்சிகள் ஏராளம்.
~~
தரமணி - கான்க்ரீட் தரைகளுக்கு
நடுவே அரும்பிய காதலும் அதன் போக்குகளைக் கொண்ட படம் தான் என்று ட்ரைலரைப் பார்த்து எண்ணி படத்திற்கு சென்ற பலரை குற்ற உணர்ச்சியோடும் சிலரை நம்பிக்கையோடும் வெளி வர வைத்த ராமின் மாஸ்டர் பீஸ் இந்த தரமணி. "நாம எப்பவோ எப்படியோ பல திருட்ட செய்திட்டே இருக்கோம்.அந்த ஒவ்வோரு திருட்டும் நம்மள எதாவது ஒரு வகையில ஒரு உறுத்திட்டே இருக்கும்",இந்த ஒன்லைனரை கொண்டு பல பக்கங்கள் போகிற திரைக்கதை மற்றும் நேர்த்தியான கதை சொல்லல். வீட்டு ஒடுக்குமுறைக்கு மாற்றாக பெண்கள் அலுவலக ஒடுக்குமுறையை தேர்ந்தெடுக்க வைப்பது அதன் கவர்ச்சி உலகம்தான். ஜெயகாந்தன் எழுதிய 'அக்கினிப்பிரவேசம்' சிறுகதையில் வரும் கார் போல் அவ்வுலகம் ஜொலிக்கிறது. பெண்களுக்கு சிறகை கொடுப்பது போல் பாவ்லா காட்டுகிறது. ஆனால் அந்த சிறகு ஆணிடம் இருந்து பறிக்கப்பட்ட சிறகு.
தன் சிறகை பறிகொடுத்த ஆண், அச்சிறகை பயன்படுத்தும் பெண்ணை பார்த்து பொறாமைப்படுகிறான். தாழ்வு நிலை கொள்கிறான். அவன் சிறகை பறித்ததோடு மட்டுமல்லாமல், அவன் உறவை நிராகரிக்கும் போக்கையும் பெண்ணுக்கு ஊட்டிவிடுவது இன்னுமே அவனுக்கு பதற்றத்தையும் கோபத்தையும் கொடுக்கிறது.
இப்படி சிறகு இழந்தவனும் அச்சிறகை அடைந்தவளும் ஒரே கூரையின் கீழ் வாழும் நிலை ஏற்பட்டால், அது எத்தனை கதைகளை கொண்ட களமாக இருக்கும்? அந்த களம் தான் தரமணி.
படத்தின் முதல் வெற்றி டைரக்டர் ராமின் வாய்ஸ் ஓவர். கற்றது தமிழ் ல வர்றது கேரக்டர் நரேஷனாக இருந்தது அனால் தரமணியில் அது இயக்குனரின் களம். ராம் பேசியது முழுதும் இந்தியாவில் பேச தயங்குகிற விஷயம் ஆனாலும் தான் சொல்ல வந்த கருத்தை தைரியமாய் சொல்லி அது எல்லாருக்கும் போய் சேருகின்ற விதத்தில் சொன்னதற்காக படத்தின் வசனங்களுக்கு கிடைத்தது அவ்வளவு விருதுகள்.
எவரும் தம் சிறகுகளை இழக்க வேண்டாம் என்பதுதான் நம் விருப்பம். போன தலைமுறை வரை சிறகு இழந்திருந்த பெண்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனில், இந்த தலைமுறையில் சிறகு பறிகொடுத்த ஆண்களும் சிறகு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆணை நிராகரிக்கும் பெண்களும் நிகர் அளவில் பரிதாபத்துக்குரியவர்கள். இந்த இருபாலினத்தையும் சண்டை போட வைத்துவிட்டு, சிறகு கட்டி உயரே உண்மையில் போய்க்கொண்டிருப்பது பன்னாட்டு நிறுவனங்களின் லாபங்கள்தான்.
இந்த தலைமுறையில் இருக்கும் ஆண், பெண் உறவு சிக்கல்கள், தனிமை, நியோலிபரலிச சிக்கல்கள் என பலவற்றுக்கு காரணம் உண்மையிலே வேறு. நாம் ஆண்களை மட்டும் திட்டி கொண்டிருக்கிறோம். உண்மையில் அவர்களும் இங்கு பாதிக்கப்பட்டவர்களே. இருபாலினத்துக்கும் தேவை தம் எதிர்பார்ப்புகள், சூழல்கள், சிக்கல்கள் ஆகியவற்றை பற்றிய வெளிப்படையான உரையாடல் மட்டுமே என்பதை மிகவும் நேர்த்தியாக கூறிய விதத்தில் இன்றைய இளைஞர்களின் ஏராளமான ஆதரவைப் பெற்றது தரமணி.
வசந்த் ரவி பிரபுவாகவும் ஆண்ட்ரியா ஆல்தியாவாகவும் இன்றைய இளைஞர்களின் கண்ணாடியாக பிரதிபலித்தார்கள்.
மழைக்கு ஒதுங்கியவர்களாக அறிமுகமாகி தங்கள் கதைகளை பகிர்ந்துகொள்ளும் பிரபுவும் ஆல்தியாவும், மெது மெதுவாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலில் விழுந்து பின்னர் இருவரும் ஒருவரையொருவர் இன்னும் நன்றாக புரிந்துகொள்வதன் விளைவாக, பிரிந்து செல்கின்றனர். பின் பிரபுவும் அல்தேயாவும் வாழ்க்கையின் அர்த்தத்தையும் காதலின் உண்மை தேவையையும் தனித் தனியாக எப்படி உணர்ந்து இணைகிறார்கள் என்பதை நமக்குள் இருக்கும் கொஞ்சம் சந்தேகத்தனம் கொஞ்சம் வெறுப்பு கொஞ்சம் பாசாங்கு நிறைய ஆணாதிக்கத்தை திரையில் காட்டி நம் பொட்டில் அடித்து சொன்ன விதத்துக்காக ராமை உச்சி முகரலாம்.
மைய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாது ஸ்டேஷனில் காவலுக்கு இருக்கும் பர்ணபாஸ் முதல் போட்டோக்களை டெலீட் செய்ய தேவையில்லை என சொல்லும் சௌம்யா, போலீஸ் கமிஷனரின் மனைவி, கடைசி வரை முகம் காட்டாத வீனஸ், அந்த ஜோடி புறாக்கள் என ஒவ்வொரு சின்ன கதாபாத்திரத்தின் குண நலன்களையும் விரிவாக நிறுவிய பாத்திரப் படைப்புகளும், எல்லா கதாபாத்திரங்களும் பேசும் வசனங்களும் மிக அருமையாக எழுதப்பட்டிருந்தது.
‘நீ ஸ்கர்ட் போட்டுருக்க, தம் அடிக்குற... அதனால, நீ என் கூட படுக்க ஓகே சொல்லுவன்னு நெனச்சேன். மத்தபடி, I am harmless flirt’ என மொத்தமாக பெண்களை stereotype செய்யும் மேலதிகாரி கதாபாத்திரம், ‘பர்ணபாஸ் வாக்கு, பைபிள் வாக்கு லே’ என பெருமையாக படம் முழுக்க தன் வீனஸைப் பற்றி பேசும் பர்ணபாஸ் இறுதியில் பிரபு செய்த காரியத்திற்காக அவனை திட்டாமல் நன்றி சொல்வது, ‘நாய்ல என்னடி நல்ல நாய், கெட்ட நாய்? நாம எப்படி பிஸ்கட் போடுறோம்ங்கிறதுல தான் இருக்கு’ என தத்துவம் பேசும் அல்தேயாவின் தோழி, ‘ஆம்பளைங்கள்ல நான் பார்த்த ஒரே நல்லவன் நீ தான், நீ எந்த தப்பும் பண்ணமாட்டே’ என சொல்லும் சௌம்யா, எப்படியோ கிடைத்த ஒரு நம்பரை அழைத்து பிரபுவிடம் பேசும் கமிஷனரின் மனைவியும் அவரது முடிவும் என படம் முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு காட்சியுமே ஆயிரம் கதை சொல்லியது . சிறுவன் எழுதும் bitch story யும், மது பாட்டில்களை தூக்கியெறிய அவன் சாலையைக் கடந்து செல்லும் அந்த சில நொடிகளும் நம்முள் கலவரத்தை ஏற்படுத்தியது.
‘என் அம்மாக்கு நான் ஒரே பொண்ணுன்னா, நீயும் உன் அப்பாவுக்கு ஒரே பையன் தானே’, ‘உன்னோட 2478 ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ்ல, 30 பேரு நான் தான்’, ‘பெண் பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, அடிப்படை உரிமை கோருதல், சங்கம் அமைத்து போராடுதல் என எதுவுமே இல்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கப்படக்கூடிய கார்ப்பரேட் ஊழியர்கள், மழைக்காலத்து சென்னையைப் போல தத்தளிப்பவர்கள்’ என வசனங்கள் ஒவ்வொன்றும் சுருக்கென்று மனதில் பதிந்தவை.
படத்தின் மிகப் பெரிய பலம் என்னவெனில் அனைவரும் சொன்னது போல முத்துக்குமாரின் வைர வரிகளும் யுவனின் ஆனந்த யாழும் தான்.
'பெண் என்பவள் ஆண் பார்வையில் மோக சதை தானா ? என்னை வெட்டி கூறிட குத்தி கிழித்திட விரல்கள் நீண்டிடுதே ' என்று பெண்ணியமும்,
'பாவங்களை சேர்த்து கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம் என்னை மன்னிப்பாயா யா அல்லாஹ்' என்று அறமும், 'வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய் என்று காதலும் பேசின அந்த எழுத்தரக்கனின் வரிகள்.
படத்தின் ஒரு சில சிறந்த காட்சிகள் :
தூங்கிக் கொண்டிருக்கும் பெரியவரிடம் திருடிய மூணு லட்சத்தை திருப்பி தருவதாக எழுதி வைத்துவிட்டு போன மறுநாள் அவர் மாரடைப்பால் இறந்த செய்தி பார்த்து,பணத்திருட்டில் அதிர்ச்சியாகி இறந்து போகியிருப்பார்னு கூனிக் குறுகிற கதாநாயகனோட ஒரு திருட்டுத் தன்மை, கிழவரோட குடும்பத்துக்கு பல மாதங்கள் கழித்து பணத்தை கொண்டு போகையில்.
"அவர் ஆறுமணிக்கே இறந்திட்டார் உங்களால சாகலை"ன்னு செல்லுகின்ற அவர் மனைவி.ரெண்டு பேருக்கும் நடுவில் ஒரு வெண் திரைச்சீலை மறைக்கப்பட்டு வெண்மையில் சற்று பாதித் தெளிவில் காட்சியாக்கிய காட்சிப்பதிவு ரொம்ப ரொம்ப நுண்ணிப்பான அந்த குற்ற உணர்வையும்,அந்த குற்ற உணர்வினை ஏற்று மன்னிக்கும் மனித உணர்வும் ஒரு வெண்படிமமா காட்சியாக்கப்பட்டிருக்கும்.
இந்த காட்சி முடியும் சமயத்தில் அந்த வீட்டில் இருக்கிற சிறுமி ஒருத்தி" மாமா சாப்பிடுங்க"ன்னு சொல்லும் போது அவனோட பாவமெல்லாம் அங்க மன்னிக்கப்பட்டு போகும்.
அந்த முழுமையில் அவனுக்குள்ள பூர்த்தி நிலை வரும்.அந்த பூர்த்தி நிலைக்கு பிறகு என்ன ஏதுன்னு நிலைகுலைந்து போகிற மனம் புனிதத்துவமாகும்.அதாவது கடவுளாக்கப்பட்ட நிலை.அப்பொழுது நட்டநடு ஆற்றில் மிதக்கும் ஒரு சடலத்தை பற்றி இழுத்து பெயரே தெரியாத பிணத்தை தூக்கும் அந்த இடம் சரீரத்தை ஒரு புனிதமடைய வைக்கும்.
இப்படி மனித மனவெளியின் குற்ற உணர்வுகள் அதிலிருந்து விடுபட்ட ஒரு புனிதம்.
தன் மனைவிக்கூட தொலைபேசில தெடர்பு ஏற்படுத்தினவன் கிட்ட தன்னுடைய மனைவிய அடித்ததை சொல்லி அழுதிட்டு," நானும் தான் சபல பட்டிருக்கேன் ரெண்டு தடம்.நான் ஆம்பள அவ பொம்பளல்ல.நீ நல்லது பண்ணிருக்க.என்னோட மனைவிய நான் புரிஞ்சிக்கிட்டேன்"னு அழுகிற ஒரு கணவன் கதாப்பாத்திரத்தில் அழகம் பெருமாள் ஒரு தீர்க்கமான மனிதத்த வெளிப்படுத்துவார்.அது அபூர்வமான மனிதனுடைய மனிதம்.
தொடங்கி நான்கு வருடங்கள் கடந்தும் பல தடைகளைத் தாண்டிய பின்பு படம் வெளியானாலும் இப்படி எண்ணற்ற சாமானியர்களின் வாழ்வியலையும் உணர்வுகளையும் அதோடு சேர்த்து உலகமயமாக்கப்பட்டலின் விளைவுகளையும் யாரிடமும் எந்த ஒரு சமரசமும் இன்றி ஒரு சேர ஒன்றாக கொடுத்தமைக்காக அன்பின் ஆயிரம் முத்தங்கள் ராம்.
தரமணி - பேரன்பின் ஆதிஊற்று.
~~
🖤🖤
ஆகஸ்ட் 11, 2019

Comments
Post a Comment