'அவ்வளவு தூரம் நடந்தாய் வந்தாய்?'
'யாரும் துணையற்றா'
'இருட்டாக இருந்திருக்குமே'
'இன்னும் போக வேண்டியது இருக்குமே'
நடந்துதான்
தனியாகத்தான்
இருளில்தான்
தெரியும். போக வேண்டிய தொலைவு அதிகம்.
எனக்கு வேறு பாதைகள் இல்லை.
இதன் வழியாகத்தான்
இதை நான் கடக்க வேண்டும்
உங்களையும் கூட.
🍂 🍁
~~
ஜூன் 27, 2018
Comments
Post a Comment