நா. மு. நினைவுகள்
அவநம்பிக்கையும், விரக்தியும் சூழ்ந்துள்ள சமயங்களில் கூட வாழ்க்கையைக் கசப்புணர்வுடன் அணுகாமல் தன் வரிகளால் அதன் மீது வெளிச்சத்தைப் பரப்பிய வித்தகர். இவரால் தான் அழகியல் என்றாலே மழை என்ற நினைத்த நம் தலையில் 'சுடும் வெயில் கூட அழகு' என்று தன் வரிகளால் செல்லக்குட்டு வைக்க முடிந்தது. தாய் மடியின் வெப்பத்தை தவறவிட்டு வெறும் தாலாட்டு மட்டுமே கேட்டுக் கொண்டு உறங்கும் குழந்தைகளுக்கு இவர் எழுதிய 'ஆனந்த யாழ்' தான் தந்தையின் வாசத்தை மீட்டெடுத்தது.
இவர் வரிகளோடு சேர்த்து யுவனின் இசையும், செல்வராகவனின் காட்சிகளும் இணைந்து கொள்ள இரண்டாயித்திற்கு பின்னான ஆண்டுகளில் தன் பதின்மத்தை கொண்டாடும் இளைஞர்கள் கொண்ட காதல் உணர்வுகளுக்கு வாதையாகவும், கூடாரமாகவும் விளங்கின. இன்றளவும் முத்துக்குமாரின் பாடல்கள் இவ்வளவு சிலாகிக்கப்படுகிறது என்றால் என்னுடைய வலிகளையும், உணர்வுகளையும் இவ்வளவு துல்லியமாக இந்த மனிதனால் எப்படி எழுத முடிந்தது என்ற ஆச்சரியம் தான்.
இவரின் கவிதைகளில் வரும் மனுஷிகள், மனிதர்கள், நிகழ்வுகள் அனைத்தும் இயல்பு என்னும் இவரின் வலுவான கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கயிற்றால் சுருக்குப்பையில் கடவுளை வைத்திருக்கும் பாட்டியிலிருந்து மாநகர வீதிகளில் இறைக்கப்பட்ட பூக்கள்வரை அவரால் முடிச்சுப்போட முடிகிறது. எல்லோருக்கும் டீ வாங்கித்தரும் மார்க்சீய தோழரிலிருந்து கல்லூரியில் பலமுறை காதலித்துக் கடைசியில் ரங்கநாதன் தெருவில் பிள்ளைக்கு பால் டப்பா வாங்கிக் கொண்டிருக்கும் குடும்பஸ்தன் வரை கோர்க்க முடிகிறது. காதலித்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிலிருந்து தன் மனதில் எழும் கேள்விகளை எழுதப் பென்ஸிலைக் கூராக்கும் சிறுமிவரை தொட முடிகிறது.இப்படி உருவாக்கப்பட்ட இந்த பிம்பங்கள் தான் இவர் எழுத்தின் வெற்றி.
இறுதியாக சொல்வதெல்லாம் ஒன்று தான்..
அடர் கானகத்தின் பச்சைகளில் பிழைத்திருத்தல் எளிது.. குளிர் வாட்டும் பாலை இரவுகளில் தனிமை போக்கவாவது நீங்கள் இருந்திருக்கலாம் !
~~
நா. முத்துக்குமார் நினைவு தினம்.
🍃🍃
ஆகஸ்ட் 14, 2019

Comments
Post a Comment